இந்த மாதம் இறுதியில் தளபதி 65 படத்திற்கான பூஜை..?

Pooja for thalapathy 65, starring thalapathy Vijay, will be held later this month.

தளபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திற்கான பூஜை இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவல்.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புஜையை மட்டும் இந்த மாத இறுதியில் தொடங்விட்டு படத்திற்கான படப்பிடிப்பை மே மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.