முன்னதாகவே வெளியாகும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம்.! நாளை மறுநாள் டிக்கெட் முன்பதிவு...

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.

தற்போது, இந்த பிரம்மாண்ட திரைப்படம் அமெரிக்காவில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறதாம், இந்தியாவில் சொன்னப்படி, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் நிலையில், அங்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக்  அறிவித்துள்ளது.

unknown node

இரண்டாம் பாகத்தில் நடிகர்களான சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.