சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா.?? விளக்கம் அளித்த பி.வாசு.!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா என்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா என்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிக்கிறார்.

unknown node

இந்த நிலையில், முதல் பாகத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.

unknown node

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இயக்குனர் பி.வாசு கூறியது “ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை…அனுஷ்கா மட்டுமில்லை…இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் நடிக்க வைக்க பேசி வருகிறோம்…சந்திரமுகி படத்தில் யார் நடிக்கிறார் என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா.?? விளக்கம் அளித்த பி.வாசு.!