கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தனம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்னும் இந்த திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு தமிழகத்தில் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
unknown nodePonniyin Selvan [Image Source: Twitter ]
லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodePonniyinSelvan2 [Image Source: Twitter ]
படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாக 500 கோடிகளுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்கவைத்தது என்றே கூறலாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்-சாரே கொல மாஸ்… சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான உதயநிதி ஸ்டாலின்.! வெளியான சீக்ரெட் தகவல்…
unknown nodeUthayanithi Stalin [Image Source: Twitter ]
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் ” பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தமிழகத்தில் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியீடுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை லைக்காவே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.