சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்.!

சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.

சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.

நடிகர் சூர்யா தற்போது நவரசா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடபட்டது. இன்று சூர்யா தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வகையில், “எதற்கும் துணிந்தவன் ” படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரையும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட் வெளியாவதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, சூர்யாவின் 39 வது படத்தை இயக்குவதாகவும், படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.

unknown node
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்.!