ஆயிரத்தில் ஒருவன் 2 டிரைலரை வெளியிட்ட செல்வராகவன்..!!

Selvaragavan has posted the trailer edited by 1 in a thousand fans on his Twitter page

ஆயிரத்தில் ஒருவர் 2 ரசிகர்கள் எடிட் செய்த  டிரைலரை செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்த அப்டேட்டை வெளியிட்டார்.

இந்த ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக ரசிகர்கள் எடிட் செய்த டிரைலர் ஒன்றை பார்த்து வியந்துள்ளார். அந்த டிரைலரையும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.

unknown node