ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு தேசிய விருது கிடைக்கும்.! ஜிவியை பாராட்டிய செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் வெளிவந்த மிகப்பெரிய தரமான படம் என்றால் "ஆயிரத்தில் ஒருவன்".

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் வெளிவந்த மிகப்பெரிய தரமான படம் என்றால் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷுக்கு  தேசிய விருது கூட கிடைத்திருக்கலாம் என பலர் கூறுவது உண்டு.

unknown node

ஆனால், அந்த படத்தில் இசையமைத்ததற்காக ஒரு விருது கூட ஜிவி பிரகாஷிற்கு கிடைக்கவில்லை. சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக  இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படியுங்களேன்-வார்த்தை விட்ட இயக்குநர்…சென்னை திரும்பிய சிம்பு.? சோகத்தின் உச்சியில் ரசிகர்கள்.!

unknown node

அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன்  ஜிவி பிரகாஷுக்கு கால் செய்து தனது தேசிய விருது கிடைத்துக்காக பாராட்டியுள்ளார்.  அப்போது ஜிவி “ஆயிரத்தில் ஒருவன்”  படத்திற்கு  எதிர்பார்த்தேன் என்று கூற, அதற்கு செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2′ படத்துக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்று கூறிவிட்டாராம். இதனை ஜிவி பிரகாஷே சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

unknown node

இதன் மூலம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ், கார்த்தி ஆகியோர் நடிக்க, படத்திற்கான படப்பிடிப்பு வரும் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.