அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளியான "கோடியில் ஒருவன்" டிரைலர்...!!

The trailer of the movie Kodiyil Oruvan starring Vijay Antony has been released.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’.அதனை சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் என ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node
அதிரடி சண்டைக்காட்சிகளுடன் வெளியான "கோடியில் ஒருவன்" டிரைலர்...!!