நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘நாய் சேகர் Returns’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர் நடித்த சூனாபானா, பாடிசோடா, நாய் சேகர், கைப்புள்ள, கான்ட்ராக்டர் நேசமணி ஆகிய கதாபாத்திரங்கள் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது.
unknown nodeநீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன்படி தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்-இந்த முறை இயக்குனர் இல்லை…வில்லன்.! 7 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் பிரபலம்.?
unknown nodeஇதில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்நிலையில், இன்று வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படம் அடுத்த மாதம் (அக்டோபர்) 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
unknown node