பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "பிரின்ஸ்". இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிரின்ஸ்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இசை பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

unknown node

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி படம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி அன்று கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.