சூரரைப்போற்று இந்தி ரீமேக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Excited to announce our association with @Abundantia_Ent lead by @vikramix for #SooraraiPottru in Hindi, Directed by #SudhaKongara@CaptGopinath#Jyotika

சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்தை நடிகர் சூர்யா 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், படத்தை அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். இதனை சூர்யாவே தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சூர்யா நடித்த மாறா கதாபாத்திரத்தில், நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்த அப்டேட் வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node