கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் யாஷ் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeஇந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கேஜிஎப்-2 படத்தின் வசூல் அதிகரித்து செல்கிறது. விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
unknown nodeமேலும், தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் அல்லாத பிற மொழி படங்களில் பாகுபலி 2 மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படம் மட்டுமே இதுவரை தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1000 CR MARK WORLDWIDE ????
Thankyou all????????♥️#KGFChapter2 @Thenameisyash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @DreamWarriorpic @PrithvirajProd pic.twitter.com/07CMvjHail
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) May 4, 2022