இது சும்மா ட்ரைலர் தான்.. இனி தான் ஒரிஜினல் சம்பவம் இருக்கு.! துணிவு இயக்குனர் அதிரடி பேட்டி.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

Thunivu [Image Source: Twitter]

இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் துணிவு படம் பற்றி பேசி அஜித் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

unknown node

Thunivu Pongal [Image Source: Twitter ]

இதுகுறித்து பேசிய அவர் ” துணிவு படத்தில், நடிகர் அஜித்தின் லுக்கில்,ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுடைய கொண்டாட்டத்தை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதையும் படியுங்களேன்-பணிவா சொன்னா ஏத்துக்கலாம் துணிவா நின்னா வா பாத்துக்கலாம்.! பரபரப்பை கிளப்பிய வாரிசு பேனர்.!

unknown node

H Vinoth [Image Source: Twitter ]

ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே  இப்படி உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து,  மேற்கொண்டு, நாங்கள் வெளியிடவுள்ள ப்ரொமோக்களை பார்த்தால், ரசிகர்கள் என்ன செய்வார்கள் என புரியவில்லை”  என்று கூறிஉள்ளார். இதன் மூலமே படம் எந்த அளவிற்கு தரமாக வந்துள்ளது என தெரியவந்துள்ளது.