சந்தோஷமோ, சோகமோ மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை எப்போது வேண்டுமானாலும் கேட்பது உண்டு . அவர்கள் கேட்கும் பாடல்களின் பிளே லிஸ்டில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வளவு பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா.
unknown nodeஅன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 6000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா.
unknown nodeஅவற்றில் பாடல்கள் தாண்டி அவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இளையராஜா தான்.
unknown nodeபத்மபூஷண் விருது, 4 முறை தேசிய விருது, பல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை குவித்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜாவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.