யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை – இசையமைப்பாளர் யுவன் திடீர் அறிக்கை!

Yuvan has released a record stating that he is not responsible for contracting with anyone other than himself through his companies.

தனது நிறுவனங்கள் சம்பந்தமாக தான் யாருக்கும் எந்த அதிகாரத்தையும் அளிக்கவில்லை எனவும், தன்னைத்தவிர வேறு யாரும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு தான் பொறுப்பாக முடியாது எனவும் இசையமைப்பாளர் யுவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா தனது சொந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் பியார் பிரேமா காதல், மாமனிதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மாமனிதன் படம் வெளியாகாத நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பணம் மற்றும் ஒப்பந்தம் சம்பந்தமாக நான் யாருக்கும் என் நிறுவனத்தில் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை எனவும், என்னைத் தவிர என் பெயரிலோ அல்லது எனது பிரைவேட் லிமிடெட் மற்றும் நியூ ரெக்கார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயரிலோ பண பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை எனது நிறுவனங்களின் சார்பாக அதிகாரபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை,

unknown node