நிறுவனங்களின் 3 ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவு. கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் 3 ஆண்டுகள் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில அரசுகள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேலைவாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் […]
தனது நிறுவனங்கள் சம்பந்தமாக தான் யாருக்கும் எந்த அதிகாரத்தையும் அளிக்கவில்லை எனவும், தன்னைத்தவிர வேறு யாரும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு தான் பொறுப்பாக முடியாது எனவும் இசையமைப்பாளர் யுவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது சொந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் பியார் பிரேமா காதல், மாமனிதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மாமனிதன் படம் வெளியாகாத நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை […]
இயற்கை எரிவாயுவை விற்பனை ஏலத்தில் பற்கேற்க அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை எரிவாயுவை விற்பனைக்கான ஏலத்தில் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் பங்கற்க தடை அதே போல் உறுப்பு நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தடை குறித்து மத்திய அரசு சுதந்திரமான அமைப்பே ஏல நடைமுறையை முன்னின்று நடத்தும் என்று கூறியுள்ளது.
தமிழக அரசு ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, பல புதிய நிறுவனங்களுடன், தொழில்துறைகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிற நிலையில், ரூ.5,137 கோடி முதலீட்டில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொளி மூலமாகவும் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதத்தில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]