அமிர்தா ஐயர் : பிகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அமிர்தா ஐயர் தொடர்ச்சியாக ஹீரோயின் கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அந்த வகையில், வணக்கம் டா மாப்ள , லிஃப்ட், காஃபி வித் காதல் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இருப்பினும், இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
unknown nodeஇதன் காரணமாகவே, அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் என்று கூட சொல்லலாம். தெலுங்கில், கடைசியாக இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்து இருந்தார். படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிகை அமிர்தா ஐயர் படங்களில் நடிக்க கமிட் ஆன மாதிரி தெரியவில்லை.
unknown nodeஎனவே, பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதால் சமீபகாலமாக நடிகை அமிர்தா ஐயர் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றையும், புகைப்படங்களையும் வெளியீட்டு இருந்தார்.
unknown nodeஇந்நிலையில், அதனை தொடர்ந்து மஞ்சள் நிற டிசர்ட் அணிந்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும், கவர்ச்சி அள்ளுது என கூறி வருகிறார்கள்.