எந்த இயக்குநரும் எனக்கு அங்கீகாரம், மரியாதை தந்ததில்லை – கங்கனா ரனாவத்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் இன்று வெளியானது.

இந்த டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகை கங்கனா ரணாவத் கூறியது “முதலில் இந்த திரைப்படத்திற்காக என்னை நடிக்க அணுகிய போது மிகவும் தயக்கமாக இருந்தது பிறகு இயக்குனர் விஜய் தன்னை ஒப்புக் கொள்ள வைத்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரி யான ஒரு நடிகர் அளித்த ஒத்துழைப்பு முக்கியமானது.

நான் பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கு கொடுக்கப்பட்டது இல்லை. எந்த இயக்குநரும் எனக்கு அங்கீகாரம், மரியாதை தந்ததில்லை ஆனால் தலைவி படத்தில் இயக்குனர் விஜய் தன்னை மரியாதையுடன் நடத்தியதாகவும் கங்கனா ரணாவத் கண் கலங்கி மேடையில் பேசியுள்ளார்.