அமெரிக்காவில் தூள் கிளப்பும் என்.ஜி.கே திரைப்படம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் செலவராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாகவும், பிரீமியர் காட்சிகளில் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படம் பிரீமியர் மற்றும் முதல்நாள் வசூல் சேர்த்து 1 லட்சம் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.