தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்...!!

One of the latest information from the thalapathy 65 movie has just been released

தளபதி 65 படத்தின் லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பும் கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது .ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்றும், அடுத்ததாக சென்னையில் வைத்து ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை மே 5 ஆம் தேதி முதல் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.