வைரலாகும் சிம்புவின் 'மாநாடு' படத்தின் புதிய ஸ்டில்ஸ்..!!

New photos of the conference movie are going viral on the social website

மாநாடு திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வருகின்ற 14 ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், வெங்கட் பிரபுவின் தயார் மறைவால் தள்ளி வைப்பதாக அறிவித்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது மாநாடு திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மாநாடு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விருப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மாநாடு படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node