சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்ததாகவும். சியான் 60 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்று ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node