Bloody Beggar Promo:நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது.
நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட்டும் தலைப்புடன் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, கவின் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தினை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்கவுள்ளார். படத்திற்கு ப்ளடி பெக்கர் ( Bloody Beggar) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது “FILAMENT” தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இதுவாகும், தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் வீடியோ அமைந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
unknown nodeஇதற்கிடையில், கவின் அடுத்ததாக இயக்குனர் இளன் இயக்கிய ‘ஸ்டார்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
