நடிகை நயன்தாரா வெளியே எங்கயாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது படப்பிடிக்கு சென்றாலோ அடிக்கடி அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானது.
#Nayanthara latest Photos #Connect | #Jawan | #Nayan pic.twitter.com/oQ2tqYIrne
— CineBloopers (@CineBloopers) December 14, 2022
அதனை தொடர்ந்து, தற்போது நயன்தராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இளமையான தோற்றத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டுடன் இருக்கும் நயன்தாராவை பார்த்த பலரும் லேடி சூப்பர் ஸ்டார் இந்த லுக்கில் அழகாக இருக்கிறாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeNayanthara
நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeConnect [Image Source: Twitter ]
மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்ட் திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.