நயன்தாரா இப்படிபட்ட குணம் கொண்டவர்.. வீடியோ மூலம் ரகசியம் கூறிய காதல் கணவர் விக்கி.!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதிபதி, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

unknown node

இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோ, புகைப்படங்களை பிரபல OTT-தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளது. இதனால், திருமணத்திற்கு வருபவர்கள் தங்களது போன்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற நிபந்தனைகளும் வைக்கப்பட்டிருந்தது .

இதையும் படியுங்களேன்-சூர்யாவுக்கு தேசிய விருது…அதை பார்த்து அழுதுட்டேன்.! மன வருத்தத்துடன் பேசிய கார்த்தி..!

unknown node

பிறகு நெட்ப்ளிக்ஸ் OTT-தளம் நயன்தாரா -விக்னேஷ் சிவனுடைய திருமண புகைப்படங்களை வெளீயிட்டு விரைவில் முழு திருமண வீடியோ வரும் என அறிவித்திருந்தார்கள். இதனால் எப்போது அந்த வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

unknown node

அந்த வீடியோவில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியுள்ளார்கள். அதில் முதலில் பேசிய நயன்தாரா நான் என்னுடைய வேலையை மட்டுமே நம்புவேன், எங்களை சுற்றி காதல் எப்போவுமே இருந்து கொண்டு இருக்கும்” என நயன்தாரா கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் “ஒரு பெண்ணாக அவர் ஓர் முன்னுதாரணம். அவர் மனதும் அழகு வெளித்தோற்றமும் அழகு” என புகழந்து பேசியுள்ளார்.

unknown node