லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நதியா...?

Talks are underway to cast actress Keerthi Shetty in the lead role in a Telugu film to be directed by Lingusamy.

இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியைவிடம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் லிங்குசாமி.ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன்,கும்கி உள்ளிட்ட ஒரு சில படங்களையும் தயாரித்து வந்தார்.

கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கிய இவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தினையும் இயக்காத நிலையில் தற்போது தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தெனி நடிக்க உள்ளார் என்றும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பினை தொடங்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் லிங்குசாமி கடந்த 14 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியைவிடம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நதியா...?