நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
unknown nodeNaaiSekarReturns [Image Source: Twitter ]
படத்தில் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, சஞ்சனா சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”படத்தின் ட்வீட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
#NaaiSekarReturns (Tamil|2022) – THEATRE.
Baring Anandraj & Gang’s few comedy portion, its a complete dud. SaNa’s music ok. Expected much more from Vadivelu. Issue s with d writing-Cliched, Predictable, Logicless scenes; Thats fine actually, bt whr is humour, fun? CRINGE Drama! pic.twitter.com/XPG7GuMSK0
— CK Review (@CKReview1) December 9, 2022
படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” ஆனந்த்ராஜ் கும்பல் நகைச்சுவைப் பகுதியைப் பார்த்தால், அது ஒரு முழுமையான முட்டாள்தனம். சானாவின் இசை ஓகே. வடிவேலுவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. நகைச்சுவை என்ன வேடிக்கையா? க்ரிஞ்ச் டிராமா” என்று கூறிஉள்ளார்.
#NaaiSekarReturns#நாய்சேகர்ரிடன்ஸ் கொடுமைடா சாமி. இப்படி பண்ணிட்டீங்களே வடிவேலு.
இப்படியே மட்டமான படங்களை எடுத்துகிட்டே இருந்தீங்கனா #லைகா அலேக்கா காணாமல் போய்விடும்.#Vadivelu #NSRFromToday@Director_Suraaj @Music_Santhosh @thinkmusicindia @gkmtamilkumaran @LycaProductions
— Punnakku TV (@PunnakkuTv) December 9, 2022
மற்றோருவர் “நாய்சேகர்ரிடன்ஸ் கொடுமைடா சாமி. இப்படி பண்ணிட்டீங்களே வடிவேலு” என பதிவிட்டுள்ளார்.