நடிகர் வடிவேலு மக்களை சிரிக்க வைப்பதற்காக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அதன்படி, இவர் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்”. காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான அப்பத்தா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்-சூர்யா நடித்த கெஸ்ட் ரோல் படங்கள் தெரியுமா.? நம்ம ரோலக்ஸின் லிஸ்ட் கொஞ்சம் பெருசு தான்…
மேலும் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடிவேலு ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதால் கண்டிப்பாக இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. விரைவில் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mark your calendars ????️ & get ready for a fun ride! ???? #NaaiSekarReturns ???????? releasing on DEC 9⃣
Vaigai Puyal #Vadivelu ????️ in a @Director_Suraaj film ???? with @Music_Santhosh musical ???? produced by @LycaProductions #Subaskaran ????@gkmtamilkumaran ???????? @thinkmusicindia ???? pic.twitter.com/svShexn7Ie
— Lyca Productions (@LycaProductions) November 25, 2022