எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்...!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பன்முக திறமையால் பல

எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் நடிகராகவும் தனது பன்முக திறமைகளை வெளிக்காட்டியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது பன்முக திறமையால் பல விருதுகளை குவித்த இவர்  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது வயது முதிர்வு பிரச்னை காரணமாக காலமானார்.

இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் 3 மகள்கள் ஆவர். இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் நான்காவது மகனான ஹரிதாஸ் விசுவநாதன், 20 ஆண்டுகளாக வெளிநாட்டு வேலை பார்த்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக தான் இந்தியாவுக்குத் திரும்பினார்.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்...!