கருப்பு படத்தின் சிறப்பு காட்சி ரத்து...அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

`கருப்பு' திரைப்படம் தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஸ்வாசிகா, நட்டி, சிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், இன்று (மே 14) காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், நேற்று நள்ளிரவு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “தவிர்க்க முடியாத காரணங்களால்” சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் அதிகாலையிலேயே தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.நிதி பிரச்சனை காரணமா?படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதற்கு நிதி (பைனான்ஸ்) பிரச்சனை முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்வீட்டுக்கு கீழே ரசிகர்கள் கடும் கோபத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தோம்” என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இன்று (மே 14) வெளியாக இருந்த முழு காட்சிகளும் சிக்கலில் உள்ளன. தயாரிப்பு நிறுவனம் ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதால், இன்றைய முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில், “படம் நாளை (மே 15) வெளியாக வாய்ப்பு உள்ளது” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவலும் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.