தியேட்டரில் ஆடும் கருப்பு...ஓடிடிக்கு எப்போது வருகிறார்?

கருப்பு திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 147 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : சூர்யா ரசிகர்கள் நீண்ட ஆண்டுகளாக கொண்டாடும் வகையில் ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு கமர்சியல் படையலை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கருப்பு படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். சூர்யா நடிப்பில் இதற்கு முன்பு வெளியான கடைசி இரண்டு படங்களான ரெட்ரோ மற்றும் கங்குவா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.எனவே, அனைவருடைய கவனமும் கருப்பு படத்தின் மீது தான் இருந்தது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை இன்னுமே வெகுவாக கவர்ந்து படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றும் சொல்லலாம்.

இருப்பினும், அதிக எதிர்பார்ப்புகள் வைத்தால் சரியாக இருக்காது என சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தேகமும் இருந்தது. ஆனால், படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் இது தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம் என ஆர்ஜெபாலாஜியை புகழ்ந்து படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் சூர்யாவின் நடிப்பு மற்றொரு பக்கம் சாய் அபயங்கர் இசை படம் பார்த்தவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வரும் நிலையில், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அந்த வகையில், படக்குழு தரப்பில் இருந்து படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 147 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படியான சூழலில், திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து கருப்பு திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. எனவே, கருப்பு படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் குறித்த ஒரு தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அது என்னவென்றால், கருப்பு படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளதாகவும் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.