மதராஸி படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மதராஸி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Madharaasi movie

சென்னை :சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியான ‘மதராஸி’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த ஆக்ஷன் த்ரில்லர், சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.நெட்டிசன்களின் கருத்துகளின்படி, ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பலர் முதல் பாதி மற்றும் இடைவேளைக் காட்சிகளை “வெறித்தனமானவை” என்று பாராட்டியுள்ளனர். மேலும், சிலர் புதிதாக படத்தில் எந்த விஷயமும் இல்லை என்பது போலவும் பேசி வருகிறார்கள்.

ஆனால், சிலர் இரண்டாம் பாதி சற்று மந்தமாக இருப்பதாகவும், காதல் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதாகவும் விமர்சித்துள்ளனர். “#Madharaasi = action, attitude, and just enough drama to keep you seated. Not a classic, but worth a spin,” என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார், இது ஒரு நல்ல டைம் பாஸ் படம் என்று குறிப்பிட்டார். மற்றொருவர், “முதல் பாதி ஈர்க்கிறது, ஆனால் இரண்டாம் பாதியில் கணிக்கக்கூடிய கதையும், காதல் காட்சிகளில் சற்று தொய்வும் உள்ளது,” என்று குறைகளை சுட்டிக்காட்டினார்.

எனவே, படத்தை பார்த்து விட்டு நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம். படத்தை பார்த்த ஒருவர் “நல்லா இருக்கு முதல் பாதி காதல் & ஆக்‌ஷன் நிறைந்தது. அதைத் தொடர்ந்து டீசண்ட் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் முறையில் உள்ளது. சிவகார்த்திகேயன் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்பது போல நடித்துள்ளார். வித்யுத் கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலாகவும் மாஸாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சராசரிக்கும் மேலான பொழுதுபோக்கு. ஆக்‌ஷன் பட ரசிகர்கள் படத்தை ரசிப்பார்கள்” எனவும் கூறியுள்ளார்.

unknown node

அதைப்போல, மற்றொருவர் ” மதராஸி திரைப்படத்தை முதல் பாதி நன்றாக இருக்கிறது. கஜினியைப் போல கதாநாயகனுக்கு ஒரு மருத்துவ நிலை + துப்பாக்கியைப் போல தேசத்தைக் காப்பாற்றும் நோக்கம் . சிவா_கார்த்திகேயன் மற்றும் ருக்மினிட்வீட்ஸ் இடையேயான காதல் பின்னணிக் கதையிலும் முருகதாஸ் அழகாக பணியாற்றியுள்ளார். இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.

unknown node

அதைப்போல, மற்றொருவர் “மதராசி திரைப்படம் சுவாரஸ்யமான துப்பாக்கி கலாச்சாரப் பின்னணி வைத்து எடுக்கப்பட்டுள்ளது.மேட் மேக்ஸ் எஸ்கே கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது.நேரடி இடங்கள், சண்டைக்காட்சிகள் & எடிட்டிங் எல்லாமே பக்காவாக இருந்தது. அருமையான இடைவெளி, முழுமையான அதிரடி, இரண்டாவது பாகம் நீளமானது; சோகமாக கதை நகரவில்லை. அதிரடி ரசிகர்களுக்குப் பார்க்கக்கூடிய ஒன்று” எனவும் கூறியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node

படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ‘மதராஸி’ படத்தின் வரவேற்பு நல்லா வந்திருக்கு எனவும் தியேட்டரில் சில காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களின் கைதட்ட வந்தால் நல்லா இருக்கும்னு நாம் ஆசைப்படுவோம். அது நடக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.