பாக்ஸ் ஆபிஸ் பிளாஸ்ட்...அண்ணாச்சியின் லீடர் செய்த தரமான சம்பவம்!

‘லீடர்’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமான ‘லீடர்’ நேற்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘லீடர்’ திரைப்படம், தொழிலதிபரான சரவணன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இரண்டாவது படமாகும். முதல் படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் அவர் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரத்தில் காணப்படுகிறார்.

படத்தில் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்த ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார்.

சீக்ரெட் ஏஜெண்டான சக்திவேல் (சரவணன்), தனது மனைவியின் இறப்புக்குப் பிறகு மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் தீவிரவாத கும்பலைப் பிடிக்க முயற்சிக்கும் காவல் அதிகாரி ஆண்ட்ரியா, சக்திவேலை இந்தப் பிரச்சனைக்குள் இழுத்து வருகிறார். சக்திவேலின் உண்மையான அடையாளம் என்ன? அவரது மனைவி எப்படி இறந்தார்? இறுதியில் அவர் தனது மகளுடன் நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்பினாரா? என்பதே படத்தின் மையக் கதை.

ஏற்கனவே பார்த்த டெம்ப்ளேட் என்றாலும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ள இப்படம், ‘ஜெயிலர்’, ‘லியோ’ போன்ற பெரிய படங்களுக்கு நிகரான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.முதல் நாள் வசூல் நிலவரம் ‘லீடர்’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது. படம் சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு வாரங்களில் இப்படம் சிறப்பான வசூலைப் பெறும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படமான ‘லீடர்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் வசூல் எப்படி இருக்கும் என்பது திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.