சர்வதேச விருது விழாவிற்கு தேர்வான அசுரன்..!

The monster film directed by Vetrimaran and starring Dhanush has been selected for the 51st Goa International Film Awards.

51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

51 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும் என்றும் திரைப்பட விழா ஆன்லைன் மூலம் காணலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கோவா சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்ற படங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் 23 படங்கள் தேர்வாகியுள்ளது. அதில், 2 தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மற்றும் தகராறு , வீர சிவாஜி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கத்தில் வெளியான தேன் திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

unknown node