கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய மோகன் லால்..!!

Popular actor Mohanlal has bagged the Kerala release rights for Karnan, which is being produced by Dhanush after watching Sultan. Lt. Suresh Kamatchi praised on the Twitter page

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார்.  இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்ப டுத்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மோகன் லால் தான் வாங்கி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

unknown node

இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.