பிரபல நடிகை மியா ஜார்ஜிற்கு தொழிலதிபரான அஸ்வின் பிலிப் என்பவருடன் தேவாலயத்தில் வைத்து திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeசமீபத்தில் இவருக்கு அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்துள்ளதாகவும் ,அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களது திருமணம் கோட்டயத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைப்பெற்றுள்ளது. தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node