நடிகை மீனா அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் சில நாட்களுக்கு முன் தொடங்கினர். தற்போது இத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மீனா அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node