மே 6 இசைப்புயல் விருந்து.! வெளியானது வெந்து தணிந்தது காடு அப்டேட்.!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது.

unknown node

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வரும் மே 6-ஆம் தேதி வெளியாகும் என சிம்பு அறிவித்துள்ளார். படத்திற்கு இசைப்புயல் ஏஆர்ரஹ்மான் இசையமைத்துள்ளதால் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. மே 6-ஆம் தேதி வெளியாகும் இந்த பாடலை சிம்பு பாடியிருந்தால் ரசிகர்களுக்கு இசையுடன் சேர்த்து டபுள் ட்ரீட்டாக அமைந்துவிடும்.

unknown node