நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeஇந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிவகார்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த படத்தை நடிகர் யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.
unknown nodeபடத்தின் டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தெரிகிறது.
unknown nodeunknown node