சூப்பர் அப்டேட்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது மாவீரன்! எப்போது தெரியுமா?

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர்

Maaveeran

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாவீரன் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், ஓடிடி தளத்தில் எப்போடா வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில்,  தற்போது ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

Maaveeran on amazon prime [FILE IMAGE]

இப்படம் 11 நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக மாவீரன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் மிஸ்கியின், சுனில், சரிதா, யோகி பாபு, மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி , உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முக்கிய பகுதிக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்தார். வித்து அய்யன்னாவின் ஒளிப்பதிவில், பரத் சங்கரின் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் மாவீரன் உருவாகியுள்ளது.

unknown node

Maaveeran on amazon prime [FILE IMAGE]