புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் விருந்து..?

It has been reported that the trailer of the master movie starring actor Vijay will be released on the coming New Year's Day

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் , விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தில் டீசரும் அண்மையில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. உதாரணமாக யூடிபில் 48 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், மாஸ்டர் படத்தின் டிரைலர் வருகின்ற புத்தாண்டு தினத்தில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.