மாநாடு திரைப்படத்தின் மாஸான அப்டேட்..!!

The conference film starring Simbu will be released in July.

சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற மே 12 ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த மாநாடு திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.