நடிகர் பிரேம்ஜிக்கு திருமணமா? இது உண்மை தானா?
நடிகர் பிரேம்ஜி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும், பிரபலமான பாடகரும் ஆவார். இவர் வெங்கட் பிரபுவின் சகோதரன் ஆவார். பிரேம்ஜி பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது பெற்றோர்களும், நண்பர்களும் இவருக்கு பெண் தேடி கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன், கேம் ஓவர் என்று எழுதியுள்ளவாறு உள்ள டிஷர்ட்டை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து, இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் பிரேம்ஜிக்கு பெண் கிடைத்து விட்டது. அவர் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என கமெண்டில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
???????????? pic.twitter.com/64J28ia3dq
— PREMGI (@Premgiamaren) July 30, 2019