சித்ராவுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து விட்டது.! விசாரணையில் திடுக்கிடும் தகவலை கூறிய ஹேம்நாத் .!

Hemnath's inquiry into Chitra's demise has revealed that Chitra and I were registered married two months ago.

சித்ராவின் மறைவு குறித்து ஹேய்நாத்திடம் நடத்திய விசாரணையில் சித்ராவும் ,நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா .இவர் சீரியலில் நடிப்பதற்காக தனது வருங்கால கணவரான ஹேம்நாத் உடன் சென்னை அருகிலுள்ள நாஙரேத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் . இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதும், ஜனவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய படி சித்ராவின் சடலம் மீட்கப்பட்டது . போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையை போலீசார் பல கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த ஹேம்நாத்துடன் நடத்திய விசாரணையில் அவருக்கும் ,சித்ராவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.அதாவது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சித்ராவை தான் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், படப்பிடிப்பு முடித்து விட்டு குளிக்க செல்வதாக கூறி விட்டு தன்னை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் ,வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து திறந்த போது தூக்கில் தொங்கியப்படி கண்டதாகவும் கூறியுள்ளார் .ஆனால் இதுகுறித்து போலீசார் கூறிய போது இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே திருமணமானது உறுதி செய்ய முடியும் என அறிவித்துள்ளார் ‌.