முத்த மழையில் மாரி செல்வராஜ்! வாழை படத்தை பார்த்து எமோஷனலான பாலா!

வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் மாரி செவ்வரஜை கட்டியணைத்து பாராட்டி உள்ளார்கள்.

mari selvaraj and soori bala

சென்னை :வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் மாரி செவ்வரஜை கட்டியணைத்து பாராட்டி உள்ளார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கி உள்ள வாழை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பிரபலங்கள் பலருக்கும் படத்தை சிறப்பு காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் படத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டி பேசி வருகிறார்கள்.

குறிப்பாக, நடிகர் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தினை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் படத்தினை பார்த்து விட்டு மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார்கள். சென்னையில் படம் பார்த்த பாலா வெளிய வந்தவுடன் மாரி செல்வராஜுக்கு கையை கொடுத்தார்.

கையை கொடுத்து முடித்த பிறகு மாரி செல்வராஜை கட்டி அணைத்து கொண்டு முத்தம் கொடுத்து படம் நன்றாக இருப்பதை பாசத்தால் காண்பித்தார். பிறகு மாரி செல்வராஜ் கையை பிடித்து கொண்டு கண்களில் கண்ணீர் ததும்ப படத்தை பற்றி பாலா அவரிடம் பேசி உள்ளார். வழக்கமாக பாலா இயக்கும் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சி கூட பார்வையாளர்களுக்கு எமோஷனலாக இருக்கும்.

அப்படி படம் எடுக்கும் பாலாவே வாழை படத்தை பார்த்து விட்டு மிகவும் எமோஷனலாகி உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. பாலாவை போலவே,நடிகர் சூரியும் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறது என்பதை சொல்லும் விதமாக மாரி செல்வ ராஜை கட்டி அணைத்து கண்ணம் மற்றும் நெத்தியில் முத்தம் கொடுத்தார்.