இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் 'மாரி-2' பட வில்லன்.! குவியும் வாழ்த்துக்கள்.!

மாரி2 பட வில்லனான டொவினோ இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மாரி2 பட வில்லனான டொவினோ இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டொவினோ தோமஸ், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் டொவினோ வில்லனாக அறிமுகமானார். இவருக்கென்று பெண் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் என்றே கூறலாம்.சமீபத்தில் இவர் நடித்த பாரன்சிக் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டொவினோ தோமஸ் அறிவித்துள்ளார். டொவினோ தோமஸ், தனது காதலியான லிடியா என்ற பெண்ணை 2014ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே லிசா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவரது மனைவி இரண்டாவதாக கர்ப்பமாகிய நிலையில், தற்போது இந்த தம்பதியிருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல பிரபலங்களும், டொவினோ ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

????

A post shared by Tovino Thomas (@tovinothomas) on