தனுஷின் "மாறன்".! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

தனுஷின் 43 வது படத்திற்கு மாறன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 43 வது படத்திற்கு மாறன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு வெளியாகும் என்று நேற்று வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று நடிகர் தனுஷின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு “மாறன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.