மக்கள் செல்வனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை..??

Vijay Sethupathi's 46th film will be paired with Anukerthi Vaas, winner of the 2018 Femina Miss India pageant.

விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் அவருக்கு ஜோடியாக 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 46 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அளவில் நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.