மணிமேகலை vs பிரியங்கா: “எந்த கருத்தும் சொல்ல முடியாது”… ஜகா வாங்கும் மாகாபா!
பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என மா கா பா ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது இவ்வளவு பெரிய பிரச்னையாக வெடிக்கும் என யாருமே நினைத்திருக்க மாட்டோம். ஆனால், நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியதற்கு முக்கியமான காரணமே பிரியங்கா தான் என அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக மணிமேகலை காரணத்தை கூறியிருந்தார்.
வேதனையுடன் மணிமேகலை தனது சமூக வலைதள பக்கங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணம் பற்றி கூறுகையில் ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததாகவும், என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் வேண்டுமென்றே அடிக்கடி குறுக்கிட்டார் என சூசகமாக பிரியங்கா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என சூசகமாக கூறியிருந்தார்.
இந்த சீசனில் என் உரிமைகளைக் கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. எனக்கு சரியானது எதுவோ அதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன், யாரைப் பற்றியும் நான் கவலைப்படமாட்டேன்.
புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் ‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன்” என கூறியிருந்தார். இதனையடுத்து, பிரியங்காவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது.
இருவருக்கும் இடையே எழுந்த இந்த பிரச்சனைகள் குறித்து சின்னத்திரை பிரபலன்களிடமும் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இருவருடைய பிரச்சனை குறித்து பட்டும் படாமலும் மா கா பா ஆனந்த் ஆனந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இந்த விஷயம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த மா கா பா ஆனந்த் ” நான் இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றது இல்லை. எனவே, அங்கு என்ன நடக்கிறது என்பது சரியாக தெரியவில்லை.
பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும், பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதைப்போல, மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியே போனது அவருடைய விருப்பம். அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது” என கூறினார். பிரச்சனை பற்றி தெளிவாக பேசாமல் மா கா பா ஆனந்த் ஜகா வாங்கியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.