பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பை முடித்த மணிரத்னம்.!

It has been announced that the shooting of Ponni's Selvan movie which was held in Hyderabad has now come to an end.

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக பொன்னியின் செல்வன் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக் லக்கானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பினை ஏப்ரல் மாதம் முதல் ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் வைத்து தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.அத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் ,2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியாகும் என்று வெளியாகியுள்ளன.

unknown node